ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆணைகுழு தயார்

Date:

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடும் என சந்தேகிக்கப்படும் மாவட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

நாளை (20) முதல் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து வானிலை அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனர்த்தங்கள் காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நிர்வகிப்பதற்கான விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...