தாமரை கோபுரம் மூலம் வெறும் 500 டொலர் வருமானம்! வெளிவந்த உண்மை

0
189

தாமரை கோபுரம் கடந்த 15ம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தாமரை கோபுரத்தை காண தினமும் பெருமளவிலான மக்கள் வருகை தந்ததுடன் வந்திருந்தவர்கள் தாமரை கோபுரம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

தாமரை கோபுரத்தில் ஏறிய பிறகு சொர்க்கத்தை நெருங்கியது போல் உணர்ந்ததாக துறவி ஒருவர் கூறினார்.

எரிபொருள் வரிசைகளிலும், எரிவாயு வரிசைகளிலும் நாட்களைக் கழித்துவிட்டு, தாமரை கோபுரத்தைப் பார்ப்பதற்காக முதல் முறையாக வரிசையில் நின்றதாக சிலர் கூறியிருந்தனர்.

ஒரு கணம் அனைத்து விடயங்களையும் மறந்து விட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

தாமரை கோபுரம் குறித்து நேர்மறையான கருத்துக்களை பதிவிடுபவர்கள், அதன் காட்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை கடனை அடைக்க பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால், உள்ளூர் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட ரூபாயில் தாமரை கோபுரம் அமைப்பதற்காக டொலரில் வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்பது பிரச்னையாக உள்ளது.

நேற்றிரவு தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவும் இதே கருத்தை வெளியிட்டார்.

இருப்பினும், கண்காட்சி மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து கடனை அடைக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட வர வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவிக்கையில், முதல் 04 நாட்களில் தாமரை கோபுரத்தை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 28 ஆகும்.

ஒரு வெளிநாட்டு சுற்றுலாப்பயணி அதற்காக 20 டொலர்களை செலவிட வேண்டியுள்ளது. இதனால் முதல் 03 நாட்களில் கிடைத்த வருமானம் 560 டொலர்களாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here