அமைதியான முறையில் நடைபெறும் வாக்களிப்பு

0
296

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.

அமைதியானதும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்களாளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், தாம் பதிவு செய்துள்ள முகவரிக்குரிய தபால் அலுவலகத்தில் தமது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இல்லாவிடினும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்ககளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here