பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல கைதிகளையும் விடுவித்தல் ஆகிய தொனிப்பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இளைஞர் கூட்டணி மற்றும் பொதுசன நீதி கூட்டணி, தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆதரவுடன் இன்று (22) மாலை காலி முகத்திலில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த நடமாடும் கையெழுத்து நடவடிக்கை காங்கசந்துறையில் இருந்து ஆரம்பமானது.
நாட்டின் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கையெழுத்து பேரணி ஒக்டோபர் 10ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நிறைவடையவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் மனுவொன்றில் பொதுமக்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இதன்மூலம் முன்னெடுக்கப்படுகிறது.
























