ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்துவதாக இந்த விஜயம் அமைகிறது.
மேலும் ஜப்பான் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும் சந்தித்து விவாதிக்க உள்ளார்.
குறிப்பாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.