அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொதுச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்தியாவசிய விஜயங்களை மேற்கொள்வதில் குறைந்த பட்ச அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது அமைச்சரவை பத்திரத்தில் பரிந்துரைத்துள்ளார்.