அலி சப்ரி ரஹீமிற்கு பாராளுமன்றத்தில் தற்காலிகமாக விதிக்கபட்ட தடை

Date:

பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு தற்காலிகத் தடை விதிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக பாராளுமன்ற ஒழுக்கக்குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்ததுடன், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார்.

சட்டவிரோதமான முறையில் 74 மில்லியன் ரூபா பெறுமதியான 3.3 கிலோ கிராம் தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த போது, சுங்கப் பிரிவினரால் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகக்குறைவானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...