சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அக்கட்சியில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியில் இணைவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வந்தவர்களாவர்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இதே குழுவினர் இதே பிரேரணையை முன்வைத்தபோதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதால் ஏமாற்றம் அடைந்து இந்த நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட அக்கட்சியைச் சேர்ந்த சிலர் வேட்புமனு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.