Sunday, September 29, 2024

Latest Posts

சாதாரண தர பெறுபேறு வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் வெளியானதும் doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபேறுகளின் அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவ வேண்டுமாயின் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கலாம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.