மக்களை பற்றி சிந்திக்காமல் மின்கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என மின்சார பயனீட்டாளர் சங்க தலைவர் எம்.டி. ஆர்.அதுல கூறுகிறார்.
மேலும், மின்கட்டண உயர்வு மின்சார வாரியத்தின் திறமையின்மையையே காட்டுகிறது என்றும், கனமழை பெய்து வருவதால், நீர்மின்சாரத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும், எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நீர் மின்சாரம் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முறையாக மேலாண்மை செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாமல் மின்கட்டணத்தை உயர்த்தும் இந்த செயல் மிகவும் கேலிக்கூத்தானது என தலைவர் எம்.டி.ஆர்.அதுல குறிப்பிட்டார்.