கொழும்பு, மல் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் விநியோகத்தின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுகர்வோருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் 10 மில்லிலிட்டர் குறைக்கப்படும் வகையில் இந்த பம்ப் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த மோசடி மூலம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒரு லீற்றருக்கு குறைந்தது 05 ரூபா வீதம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
பெற்றோல் விநியோகத்தின் போது சிறிதளவு எரிபொருள் குறையும் வகையில் அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரண்டு பம்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு பம்புகளுக்கும் சீல் வைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது.