Tuesday, October 15, 2024

Latest Posts

புலமைப்பரிசில் பரீட்சையின்விடைத்தாள் திருத்தும் பணிஇரு வாரங்கள் இடைநிறுத்தம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முரண்பாட்டுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வௌியாகி இருந்தன என்றும், அந்தப் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.