இலகு ரயில் விடயத்தில் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது ஜப்பான்

0
136

அண்மையில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்ட இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜப்பானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

2020 ஆம் ஆண்டில், இந்த திட்டம் ஜப்பானில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர, இந்த திட்டம் மிகவும் விலை உயர்ந்தது எனவும், கொழும்பில் நகர உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு இது பொருத்தமான இலாபகரமான திட்டம் இல்லை எனவும் இத்திட்டத்தை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த திட்டத்திற்கு மாற்றாக, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், வீட்டுவசதி அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து மற்றொரு திட்டத்தை தயாரிப்பதாக அறிவித்தது, ஆனால் அத்தகைய மாற்று திட்டம் எதுவும் முன்மொழியப்படவில்லை.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இலகு ரயில் திட்டத்திற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் உதவி வழங்க ஒப்புக்கொண்டது. ஜப்பானிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலில் இலகு ரயில் திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கு நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும் என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டால், கடன் மறுசீரமைப்புத் திட்டம் முடிந்த பின்னரே அதைச் செய்ய முடியும் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here