பொலிஸாரினால் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு

Date:

பௌத்த விகாரை கட்டுமானங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை ஒன்றின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.

குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு நிலாவெளி பொலிஸாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின் பேரில் குறித்த போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை நிலாவெளி இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு மக்களால் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் குறித்த பகுதியில் கட்டுமாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடைசெய்யக் கோரியும் திருகோணமலை மக்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கபடவிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிருத்துள்ள நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

அத்துடன் குறித்த இடத்திலிருந்து செய்திகளை சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்களுக்கு பொலிஸாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது,

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...