இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயம்

0
42

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகிறார். எதிர்வரும் (04) வௌ்ளிக்கிழமை அவர் கொழும்பு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், நாட்டுக்கு வருகை தருகின்ற முதலாவது சர்வதேச இராஜதந்திரி இவராவார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய,மற்றும் அரசாங்கத்தின் முக்கிய உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பேச்சுக்களின் போது இலங்கை இந்திய கூட்டு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here