வடக்கில் தொடங்கிய கையெழுத்து பேரணி தெற்கில் நிறைவு

0
121

நேற்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அம்பாந்தோட்டை நகரில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.

இவ் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இவ் போராட்டமானது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக அனைத்து மக்களின் முழு ஆதரவுடன் நாடாத்தப்பட்டு இறுதி இடமான அம்பாந்தோட்டையை வந்தடைந்து நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here