எல்பிட்டிய தபால் மூல வாக்கெடுப்பு 14ஆம் திகதி

0
111

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அன்றைய தினம் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள், சேவை நிலையம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி வாக்களிக்க விசேட அவகாசம் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அது தொடர்பில் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 12ஆம் திகதி தபால் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதுடன், 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here