இளைய சமூகத்தினரே மதுவைஉங்கள் கைகளில் எடுக்காதீர்கள்யாழ். சங்கானையில் இன்று போராட்டம்

Date:

சர்வதேச நல்லொழுக்க தினத்தை முன்னிட்டு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். சங்கானை பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது.

சங்கானையில் புதிதாக ஒரு மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த மதுபானசாலை அமைக்கவுள்ள இடத்துக்கு  அருகாமையில் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், மதத் தலங்கள், குடிமனைகள் காணப்படுகின்றன. எனவே, அந்தப் பகுதியில் மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “மதுசார விலைகளைக் குறைத்து எமது சமூகத்தை அழிக்க வேண்டாம், போதையற்ற வாழ்வே ஆரோக்கியத்துக்கான வழி, எமது சமூகத்தை அழிக்கும் மது எமக்குத் தேவைதானா?, முடவனாக விரும்பும் மானிடனே மதுவைக் கையில் எடுக்காதே, இளைய சமூகமே மதுவை உங்கள் கைகளில் எடுக்காதீர், சிறுவர்களையும் மகளிரையும் மதுவுக்கு அடிமைப்படுத்தாதே” எனக் கோஷமிட்டு, பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலர் திருமதி. கவிதா உதயகுமார் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர், சங்கானை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர், வலிகாமம் மேற்கு ஓட்டோ சங்கத்தினர், அந்திரான் தோற்பயிற்சி உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தினர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...