ஜனாதிபதி தேர்தலில் புட்டின் மீண்டும் போட்டி

Date:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளன.

நவம்பர் மாதத்தில் ஒரு பெரிய மாநாடொன்று ரஷ்யாவில் நடைபெறுகிறது. அப்போது தாம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து புட்டின் அறிவிக்கலாம் என்று புட்டின் நிர்வாகத்துக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

1999ஆம் ஆண்டின் கடைசி நாளில் போரிஸ் யெல்ட்சின் ஜனாதிபதி பதவியை புட்டினிடம் ஒப்படைத்தார்.

அதன் பிறகு மிக நீண்டகாலமாக ஜனாதிபதி பொறுப்பில் புட்டின் இருந்து வருகிறார். புட்டினுக்கு ஒக்டோபர் 7ஆம் திகதி 71 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...