67 வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 ஹெச்எஸ் குறியீடுகளை சேர்ந்த பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்பட உள்ளன.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
எவ்வாறாயினும், தனியார் வாகனங்கள் தொடர்பான 304 HS குறியீடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியதன் காரணமாக நாட்டிற்கான சில இறக்குமதிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் திரு சேமசிங்க குறிப்பிட்டார்.
இது குறிப்பாக சுங்கத் திணைக்களம் மற்றும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உட்பட சிறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை செய்வதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தமது பொருளாதாரச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் அவர்கள் சற்று மகிழ்ச்சியற்றவர்களாகவும் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.