பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (04) ஆரம்பமாகவுள்ளது.
அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
11ம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனுக்களை வழங்கும் வளாகம் தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ளது.