ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்த ஐ.நா. அபிவிருத்தி வதிவிடப் பிரதிநிதி

Date:

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா  நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச்  சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆர்வம் தொடர்பிலும் வதிவிடப் பிரதிநிதி இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்குத் தௌிவுபடுத்தினார்.

ஊழலுக்கு எதிரான அரசின் வேலைத்திட்டத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த அசூசா குபோடா, அரச சேவையின் வௌிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்காக விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்த மறுசீரமைப்புகளை சரியான முறையில் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் அரச ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்குப் பிரவேசிப்பதற்கு தேவையான திறன் மற்றும் அறிவு கொண்ட அரச அதிகாரிகளை உருவாக்குவதற்கான உதவிளை வழங்குவதற்கு ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்டம் தயாராக இருக்கின்றது எனவும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஜனாதிபதி செயலாளரிடம் உறுதியளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...

செம்மணி – சர்வதேச விசாரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட தரப்பாக...