நாடு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நம்பும் அரசியல் கட்சியாக நாங்கள் இருக்கிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் போது எதிர்ப்போம் எனவும், இவ்வாறான நிலையில் நாட்டின் பாதுகாப்பு, அரச பாதுகாப்பு, மக்கள் நலன் போன்றவற்றிற்காக எமது கட்சி நிபந்தனையின்றி நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என்ற வகையில் அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் எதிர்பார்க்கும் அனைத்து எதிர்பார்ப்புகளையும் அடையக்கூடிய சூழல் உருவாகும் என நம்புகிறோம். எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் மானியம் வழங்குவது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது போன்றவற்றில் கட்சி என்ற ரீதியில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இந்த நாட்டில் நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென கட்சி என்ற வகையில் நாங்கள் உறுதியாக நம்புவதுடன் எக்காரணம் கொண்டும் நிவாரணம் தடுக்கப்படுவதை எதிர்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.