ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இது உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் மனு ஆராயப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றுக்கு தெரிவான நசீர் அஹமட் 21வது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு அளித்து கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த முஸ்லிம் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இதனை சவாலுக்கு உட்படுத்தி அஹமட் நசீர் வழக்கு தாக்கல் செய்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அஹமட் நசீரை கட்சியில் இருந்து நீக்கியமை சட்டபூர்வமானதே என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.