இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி பிரதானமாக எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும் பல மாவட்டங்களில் யானைச் சின்னத்திலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
“தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்பினர் பெருமளவிலான அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதுடன், வேட்புமனுச் சபைகள் கூடிவருகின்றன. இந்த வார மத்தியில் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் எரிவாயு சின்னத்தில் போட்டியிடவும், வன்னி பிரதேசம் யானை சின்னத்தில் போட்டியிடவும், நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடவும் இறுதி ஒப்பந்தம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது முடியப் போகிறது.”
காலியில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.