மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர் டத்தோஸ்ரீ டிராஜா ஜாம்ப்ரி அப்ட் காதிர் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார்.
நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைவரும் மலேசியாவின் வெளிவிவகார அமைச்சர் நாளை 8ஆம் திகதிமுதல் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின் போது, மலேசிய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்க உள்ளார்.
மலேசியாவின் வெளியுறவு அமைச்சருடன் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் (SCA) துணைச் செயலாளர் டத்தோ சையத் முகமட் பக்ரி சையத் அப்துல் ரஹ்மான், மலேசிய வெளிவிவகார அமைச்சின் அமைச்சர் அப்தில்பர் அப் ரஷித், OIC மற்றும் பிராந்திய ஒத்துழைப்புப் பிரிவின் (ORCD) துணைச் செயலாளர் அஹ்மட் கம்ரிசாமில் முகமட் ரிசா மற்றும் வெளியுறவுத் துறையின் சிறப்பு அதிகாரி ஆகியோரும் வருகை தரவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் நடைபெறும் IORA மூத்த அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டத்திலும் மலேசியப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.