சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் அமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைவதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.