தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

0
195

தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ தலைமன்னார், இராமேஸ்வரம் கப்பல் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்தவண்ணமுள்ளன.

தலைமன்னாரிலிருந்த உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

இவற்றுக்குப் பதிலாக புதிய உபகரணங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.

வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா நிதி இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதியை பாராளுமன்றம் விடுவித்ததும் விரைவில் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்வரும் 16ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here