41 இராஜதந்திரிகளை உடனடியாக வெளியேற்றுமாறு கனடாவிடம் இந்தியா கோரிக்கை

0
113

புதுடெல்லியுடனான முரண்பாடுகளை தொடர்ந்து இந்தியாவிலிருந்து தமது தூதுவர்களை கனடா மீள பெற்றுவருகிறது.

புதுடெல்லிக்கு வெளியில் இந்தியாவுக்கான கனேடிய தூதர், உதவி தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கும் முயற்சியில் ஜஸ்டின் ரூடோ அரசு செயல்பட்டு வருவதுடன், சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூருக்கு தற்போதைய தூதுவர்கள் மாற்றப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா தனது பெரும்பாலான தூதர்களை கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் மாற்றியுள்ளதாகவும் கனேடிய ஊடகமான CTV செய்தி தெரிவித்துள்ளது.

கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் கொல்லப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அண்மையில் கனடா பாராளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து இந்தியா-கனடா இடையே இராஜதந்திர முரண்பாடுகள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இருநாடுகளிலும் இருந்து இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து 41 இராஜதந்திரிகளை வெளியேற்றுமாறு கனடாவிடம் இந்தியா கேட்டுக்கொண்டது.

கனேடிய தூதர அதிகாரிகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டிய இந்திய வெளிவிவகார அமைச்சு, கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகளைவிட இந்தியாவில் உள்ள கனேடிய இராஜதந்திரிகள் அதிகமாகும் எனவும் இந்தியா குற்றம் சுமத்தியது.

இந்த மாற்றத்தை செய்ய ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை ஒட்டாவாவுக்கு புதுடெல்லி அவகாசம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், டெல்லிக்கு வெளியே இந்தியாவில் பணிபுரியும் கனேடிய தூதர்களில் பெரும்பாலோர் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு வெளியேற்றப்பட்டதாக CTV தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து கனேடிய தூதரக அதிகாரிகளை குறைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை, கனடாவில் இந்தியாவுக்கான விசா சேவைகளை நிறுத்திய பின்னர் புது டெல்லியால் கனடாவுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர அடியாகும்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தில், இலக்கு வைத்து கொலை செய்தமை தொடர்பில் குற்றச்சாட்டு தொடர்பாக உளவுத்துறை தகவல் இருந்தால் அதை புது டெல்லிக்கு வழங்க வேண்டும் என்றும் இந்தியா கனடாவிடம் கூறியது.

கனடாவில் 21 இந்திய இராஜதந்திரிகளும், இந்தியாவில் 62 கனேடிய இராஜதந்திரிகளும் உள்ளனர். எனவே கூடுதலாக உள்ள 41 பேரை திரும்பப் பெற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

புதுடெல்லியுடனான முரண்பாடுகளை தொடர்ந்து இந்தியாவிலிருந்து தமது தூதுவர்களை கனடா மீள பெற்றுவருகிறது.புதுடெல்லியுடனான முரண்பாடுகளை தொடர்ந்து இந்தியாவிலிருந்து தமது தூதுவர்களை கனடா மீள பெற்றுவருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here