அடுத்த வருடம் (2023) ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட நிபந்தனைகள் மற்றும் அது தொடர்பான ஏனைய தேவைகள் தொடர்பில் ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் 43ஆவது பிரிவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஏனைய பிரதான வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.