எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக நிற்கத் தயார் எனவும், மொத்த வாக்குகளில் 51 வீதமான வாக்குகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரமே அதனைச் செய்வேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
“தேசய” நாளிதழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தம்முடைய வேட்புமனுவை பெரும்பான்மைக் கட்சிகள் ஏற்றுக்கொண்டால் அது தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கமாக அமையும் எனவும் தம்மிக்க பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சி களமிறங்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது தாம் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.