ரஞ்சனின் திடீர் அறிவிப்பு

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சமகி ஜன பலவேகவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு அமுல்படுத்தப்பட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய கட்சியுடன் மீண்டும் போட்டியிடத் தயார் என அவர் குறிப்பிடுகின்றார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரையறுக்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

அதன்படி, பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு உரிமை இல்லை. அதற்கான அனுமதியை புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கிடைத்தால் தேர்தலில் போட்டியிட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...