கேக்குகளில் வெண்ணெய் முட்டை, மார்ஜரின் இல்லை

Date:

கேக்கில் உள்ள பொருட்களைப் பரிசோதிக்க இலங்கையில் இன்னும் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் போன்றவற்றை கம்பனி கேக் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தயாரிப்புகளில் பெரும்பாலும் வெண்ணெய் சுவை மற்றும் செயற்கை முட்டை சுவை உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டார். மேலும் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கேக்குகள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பதை நுகர்வோர் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான முறைகேடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக 44 வருடங்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் ஏற்பாடுகள் உரிய முறையில் தண்டனை வழங்குவதற்கு இதுவரை தயாராகவில்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் பினாங்கு மாநில முதலமைச்சர்...

சஜித் சிங்கப்பூர் விஜயம்

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...