நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் – கடந்த அரசின் தீர்மானங்கள் ரத்து

0
105

130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் தபால் திணைக்கள நடவடிக்கைகளுக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த தபால் நிலையம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் இடைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் கீழ், ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்காக தனியாரிடம் இந்தக் கட்டிடத்தை ஒப்படைக்க முன்மொழியப்பட்டது. இதனை மக்களும், தொழிற்சங்கங்களும், பிற அமைப்புகளின் எதிர்த்தன.

நுவரெலியா நகரில் அமைந்துள்ள இந்த தபால் அலுவலகம், இந்த மாவட்டத்தின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here