நசீர் அஹமட்டின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக அறிவிப்பு

0
164

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று அறிவித்துள்ளார்.

இதன்படி, அந்த வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பட்டியலில் அடுத்த வேட்பாளரை தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கவுள்ளது.

நசீர் அஹமட்க்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஆவார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து நீக்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என கடந்த 6ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்மூலம் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here