ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியாவின் சென்னை நகரிலிருந்து நேற்று பிற்பகல் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
எரிக் சோல்ஹைம், கடந்த யுத்த காலத்தின் போது நோர்வேயின் அமைதிக்கான பிரதிநிதியாக இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.