ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த தீர்மானித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி ரணவக்கவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றவாளிகள் மீதான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.