மண்டபம் அருகே இலங்கை பைபர் படகை விட்டு தப்பியோடிய இரு நபர்கள்

0
149

தமிழகத்தின் மண்டபம் அருகே இலங்கை பைபர் படகை விட்டு விட்டு தப்பியோடிய இரண்டு நபர்கள் கடத்தல்காரர்களா? சமூக விரோதிகளா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இலங்கை பைபர் படகை விட்டு விட்டு மர்ம நபர்கள் இரண்டு பேர் தப்பி ஓடியதாக அப்பகுதி உள்ள மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அப்பகுதிக்கு சென்று பொலிஸார் இலங்கை படகை மீட்டு கடத்தல்காரர்கள் யாரேனும் வந்தார்களா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், படகில் இருந்து 2 பேர் அதி வேகமாக தப்பித்து சென்றதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பெலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏற்கனவே மர்ம நபர்கள் தப்பி சென்ற பகுதி கடத்தல் தங்கம், கஞ்சா உள்ளிட்ட கடத்தல் நடைபெறும் பகுதியாக உள்ளதால் வந்தவர்கள் கடத்தல் காரர்களாக இருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here