யாழில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Date:

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பாட்டார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாவும், வவுனியாவை சேர்ந்த நபர் நீண்ட காலமாக துண்ணாலை பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, அல்வாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நெல்லியடி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...