கிழக்கு ஆளுநரை சந்தித்தார் அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையாளர்

Date:

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரின் மத உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தூதுவர் ஸ்டீபன் ஸ்னெக், தூதுவர் ஜேமி ஸ்டாலி, கண்காணிப்பு கொள்கை ஆலோசகர் செமா ஹசன், கொள்கை ஆய்வாளர் ரூபி உட்சைட், அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஷந்தீப் குரூஸ், அமெரிக்கா கொழும்பு தூதரகத்தின் அரசியல் நிபுணர் ஆகியோர் உடனிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

DP கல்வி IT வளாகத் திட்டத்தின் 167வது கிளை திறப்பு

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில்...

இன்று மழை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டா வழங்கிய இராணுவ அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின்...

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...