Wednesday, October 16, 2024

Latest Posts

17 அரசியல் கட்சிகளும்14 சுயேட்சைக் குழுக்களும் திருமலையில் போட்டி

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளினதும், 14 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேவேளை மூன்று கட்சிகளினதும், மூன்று சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.”

– இவ்வாறு திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகளினதும், மூன்று சுயேச்சைச் குழுக்களினதும் வேட்புமனு விண்ணப்பங்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.

சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை, சரியான முறையில் விண்ணப்பத்தைக்  கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.