தற்போது இலங்கை வந்துள்ள நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்துடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் நஷீத்துடன் இணைந்து ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் பெருமையடைவதாக சொல்ஹெய்ம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். “இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான நல்ல சந்திப்பு. பசுமைப் பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் காலநிலைத் தலைமைத்துவத்திற்கான சிறந்த தொலைநோக்குப் பார்வை ஜனாதிபதியிடம் உள்ளது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.