இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இஸ்ரேலில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலில் இருந்து நாடு திரும்புவதற்கு விரும்பும் நபர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.