இஸ்ரேலில் அவசர மத்திய அரசு அமைக்க ஒப்பந்தம்

0
156

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸும் தற்போதைய போர் மோதல்களைக் கருத்தில் கொண்டு மத்திய அவசர அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அடங்கிய போர் அமைச்சரவையை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக இருதரப்பிலும் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here