தேர்தல் பிற்போடப்படும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளன.
இதில் தேசிய மக்கள் சக்தி தவிர எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் பங்கேற்றுள்ளன.
முன்னணி சோஷலிச கட்சியும் விவாதத்தில் இணைந்தது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் ஏனைய தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த கலந்துரையாடலின் பின்னர் வெளியில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.