புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை பரீட்சார்த்திகள் அனைவரும் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையத்திற்குச் சென்று பரீட்சைக்குத் தேவையான பேனாக்கள் மற்றும் பென்சில்களை மாத்திரம் எடுத்துச் செல்ல வேண்டும் என பிரதி பரீட்சை ஆணையாளர் லசிகா சமரகோன் தெரிவித்துள்ளார்.
இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், இதற்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 337,956 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் ஏற்படும் இடங்களில் இருக்கும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் மேலும் தெரிவித்துள்ளார்.