இஸ்ரேல் மற்றம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் தீவிர போர் நடைபெற்றுவரும் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாலஸ்தீன தூதரகத்துக்கு சென்று தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீனத்துக்கான ஆதரவே வெளிப்படுத்தியிருந்தார்.
பாலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியையும் மஹிந்த ராஜபக்ஷ 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வழங்கியிருந்தார்.
பாலஸ்தீனத்தின் நீண்டகால ஆதரவாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்து வருவதோடு பாலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான இலங்கை செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவராகவும் அவர் செயல்பட்டிருந்தார்.
பாலஸ்தீனத்தை ஒரு தேசமாக 1988ஆம் ஆண்டு இலங்கை அங்கீகரித்தது என்பதும் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலஸ்தீனத்தில் ‘மஹிந்த ராஜபக்ஷ வீதி’ என ஒரு வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.