ரணில் நாளை  விசேட உரை!

0
157

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க உரையொன்றை நிகழ்த்தவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நாட்டின் சமகால அரசியல் போக்கு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் இதன்போது வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், நாடாளுமன்ற அரசியலுக்கு அவர் விடைகொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here