கிளிநொச்சியில் 17 வயது மாணவிகள் இருவர்
தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு

Date:

கிளிநொச்சியில் 17 வயதான மாணவிகள் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

“எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை” – என்று எழுதி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றும் அவர்களின் சடலங்களுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

நண்பிகளான லோகேஸ்வரன் தமிழினி, சுரேஷ்குமார் தணிகை ஆகிய இரண்டு மாணவிகளும் கிளிநொச்சி, பெரியபரந்தன் பகுதியில் உள்ள லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இறுதியாக நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு பெறுபேறுக்காகக் காத்திருந்த மாணவிகளாவர்.

சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் சடலங்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இது தற்கொலையா? கொலையா? போன்ற கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...