ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண்; இஸ்ரேல் உறுதிப்படுத்தியது

0
87

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

களனி ஈரியவெடிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அனுலா ரத்நாயக்க (ஜயதிலக்க) என்பவரே தாக்குதலின் போது உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் இன்று (17) உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் இரண்டு நாட்களுக்குள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போன அனுலா ரத்நாயக்க, குறித்த தாக்குதலின் போது உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேல் பொலிஸ் திணைக்களத்தின் சர்வதேச பிரிவு இன்று காலை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

உரிய பணிகள் நிறைவடைந்தவுடன் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் அனுப்பி வைக்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இறுதி கிரியை மற்றும் சமய சடங்குகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வழங்கப்படும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here